உலகளாவிய பயங்கரவாத தடை பட்டியலில் இருந்து சிரிய ஜனாதிபதியை நீக்கிய அமெரிக்கா
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான(Donald Trump) சந்திப்புக்கு முன்னதாக சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷராவை(Ahmed al-Sharaa) “பயங்கரவாத” தடைகள் பட்டியலில் இருந்து அமெரிக்கா நீக்கியுள்ளது.
அல்-கொய்தாவுடன் தொடர்புடைய முன்னாள் போராளியான அல்-ஷராவை சிறப்பாக நியமிக்கப்பட்ட உலகளாவிய பயங்கரவாதி பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது என்று கருவூலத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், அல்-கொய்தாவுடன் தொடர்புடைய முன்னாள் போராளியும், தற்போதய சிரியாவின் உள்துறை அமைச்சர் அனஸ் கட்டாப்பையும்(Anas Hasan Khattab) பயங்கரவாத தடைகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக கருவூலத் துறை குறிப்பிட்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)




