தென்கொரியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ள அமெரிக்கா
தென் கொரியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக(reached) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று(29) தெரிவித்ததாக யோன்ஹாப்(Yonhap) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்திற்கு முன்னதாக இன்று பிற்பகல் தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே-ம்யுங்குடன்(Lee Jae-myung ) உச்சிமாநாடு கூட்டங்களை நடத்துவதற்காக, தென் கொரிய தலைநகர் சியோலில்(Seoul) இருந்து சுமார் 330 கி.மீ தென்கிழக்கே உள்ள கியோங்ஜூவுக்கு(Gyeongju) டிரம்ப் வருகை வந்தார்.
லீ ஏற்பாடு செய்த இரவு விருந்தில் டிரம்ப் கலந்து கொண்டார்.
மேலும் லீயுடன் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டதா என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு “நாங்கள் செய்தோம்” என்று விவரங்களை வழங்காமல் ட்ரம்ப் கூறினார்.
தென் கொரியா அக்டோபர் 31 முதல் நவம்பர் 1 வரை கியோங்ஜுவில் 32வது APEC பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்தை நடத்தவுள்ளது.





