அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு : அவசரமாக நடத்தப்படும் உச்சிமாநாடு!
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/gaza.jpg)
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காசா பகுதியிலிருந்து பாலஸ்தீனியர்களை மீள்குடியேற்ற முன்மொழிந்ததை அடுத்து, “புதிய மற்றும் ஆபத்தான முன்னேற்றங்கள்” குறித்து விவாதிக்க ஐக்கிய அரபு அமீரகம் புதிய உச்சிமாநாட்டை நடத்துகிறது.
இந்த மாநாடு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கடந்த வாரம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் காசாவின் மீள் குடியேற்றம் தொடர்பில் ட்ரம்ப் கருத்து வெளியிட்டிருந்தார்.
ட்ரம்பின் இந்த கருத்து கிப்து, ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு உலகத்தை கோபப்படுத்தியது.
எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா எல்-சிசி மற்றும் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா இருவரும் காசாவில் 1.8 மில்லியன் பாலஸ்தீனியர்களை மீள்குடியேற்ற வேண்டும் என்ற டிரம்பின் அழைப்பை நிராகரித்தனர்.
மேலும் அமெரிக்கா அந்த நிலப்பகுதியின் உரிமையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அழைப்பை நிராகரித்தனர், ஆனால் இறுதியில் அதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று டிரம்ப் கூறுகிறார்.