இன்றைய முக்கிய செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ட்ரம்ப் முன்னிலை! பின்னடைவை சந்திக்கும் கமலா

நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஆரம்ப முடிவுகளின்படி, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் ஒன்பது மாநிலங்களை வென்றார்.

அதேநேரத்தில் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ் நான்கு மாநிலங்களைக் கைப்பற்றினார்.

கென்டக்கி, இந்தியானா, மேற்கு வர்ஜீனியா, அலபாமா, புளோரிடா, ஓக்லஹோமா, மிசோரி மற்றும் டென்னசி ஆகிய இடங்களில் வெற்றி பெற்ற பின்னர் சற்று முன் வரை ட்ரம்ப் 198 தேர்தல் வாக்குகளைப் பெற்றார்.

ஹாரிஸ் வெர்மான்ட், மேரிலாண்ட், மாசசூசெட்ஸ் மற்றும் வொஷிங்டன், டி.சி ஆகிய இடங்களில் வெற்றி பெற்ற பின்னர் சற்று முன் வரை 112 தேர்தல் வாக்குகளைப் பெற்றுள்ளார்.

2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக பதவி வகித்த ட்ரம்ப், 2020 தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்ததை அடுத்து மீண்டும் வெள்ளை மாளிகைக்கு திரும்ப முயன்றுள்ளார்.

அதேநேரம், ஹாரிஸ் 2021 ஜனவரி முதல் துணைத் தலைவராக பணியாற்றுகிறார். ஒரு வேட்பாளருக்கு தேர்தலில் வெற்றிபெற 538 தேர்தல் வாக்குகளில் குறைந்தது 270 தேவை.

அதாவது, அமெரிக்க ஜனாதிபதியை மக்கள் நேரடியாக தேர்ந்து எடுப்பதில்லை. எலெக்ட்ரோல் காலேஜ் (தேர்வுக்குழு உறுப்பினர்கள்) முறைப்படி வாக்குப்பதிவு நடக்கிறது. மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர்.

இதில் 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள்.

SR

About Author

You may also like

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கைக்கு இந்தியா வழங்கிய மகிழ்ச்சியான செய்தி – 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

  • October 5, 2024
இலங்கைக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன், இந்திய
இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

2 வாரங்களை சிறப்பாக பயன்படுத்திய அனுரகுமார – எரிக்சொல்ஹெய்ம் பாராட்டு

  • October 5, 2024
இலங்கைக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்கவேண்டும் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாகின்றன
error: Content is protected !!