வட அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – கருத்துக் கணிப்புகளில் முன்னிலை வகிக்கும் கமலா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகளில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் முன்னிலை வகிப்பதாக தெரியவந்துள்ளது.

அவர் சுமார் 47 சதவீத ஆதரவைப் பெற்றிருக்கிறார். குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனல்ட் டிரம்ப் 3 புள்ளி குறைவாக சுமார் 44 சதவீத ஆதரவைப் பெற்றுள்ளார்.

பல்வேறு கருத்துக் கணிப்புகளைத் தொகுத்து அமெரிக்காவின் FiveThirtyEight இணையத்தளம் அந்த விவரத்தை வெளியிட்டிருக்கிறது.

ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகிக் கொண்டு துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை ஆதரிப்பதாக அறிவித்தபின் வாக்காளர் மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் CNN தொலைக்காட்சி நடத்திய விவாதத்தில் பைடன் மோசமாகப் பேசியதைத் தொடர்ந்து டிரம்ப் கருத்துக் கணிப்புகளில் தொடர்ந்து முன்னணியில் இருந்தார். இப்போது ஹாரிஸ் முன்னிலை வகிக்கிறார்.

(Visited 38 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!