முன்னணி மருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்த அமெரிக்க ஜனாதிபதி!
ஒன்பது பெரிய மருந்து நிறுவனங்கள், அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு வெளிநாடுகளில் வழங்கப்படும் அதே தள்ளுபடி விலையில் தங்கள் முதன்மை மருந்துகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அம்ஜென் (Amgen), பிரிஸ்டல்-மையர்ஸ்-ஸ்குயிப் (Bristol-Myers-Squibb) மற்றும் ஜிஎஸ்கே (GSK) உள்ளிட்ட நிறுவனங்கள், அமெரிக்க உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் 150 பில்லியன் டொலர் முதலீடு செய்ய முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முயற்சி, அமெரிக்கர்களுக்கு, குறிப்பாக மருத்துவ உதவி பெறுபவர்களுக்கு, மருந்துகளை மிகவும் மலிவு விலையில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





