ஏவுகணை சோதனைக்கு ஆஸ்திரேலியாவை பயன்படுத்த தயாராகும் அமெரிக்கா
ஹைப்பர்சோனிக் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை சோதிக்க ஆஸ்திரேலியப் பகுதியைப் பயன்படுத்துவதில் அமெரிக்கா கவனம் செலுத்துகிறது.
இது அமெரிக்கா – ஆஸ்திரேலியா மற்றும் கிரேட் பிரிட்டன் இடையேயான AUKUS பாதுகாப்பு ஒப்பந்தத்தின் விதிகளின் கீழ் உள்ளது.
ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் மக்கள் வசிக்காத நிலம் இருப்பதால், ஏவுகணை சோதனைக்கு ஏற்ற சூழலை அது கொண்டுள்ளது என அமெரிக்க பாதுகாப்பு முகமைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆஸ்திரேலியாவும் எதிர்காலத்தில் பல அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறும்.
ஏவுகணை சோதனை முன்மொழிவு தொடர்பாக ஆஸ்திரேலியாவுடன் விரிவான கலந்துரையாடலுக்குப் பிறகு இறுதி முடிவை எடுக்க அமெரிக்கா தயாராகி வருகிறது.
(Visited 11 times, 1 visits today)