ஏமனில் பல மில்லியன் டொலர் மதிப்பிலான ஆளில்லா வானூர்திகளை தொலைத்த அமெரிக்கா

ஏமனில் அமெரிக்கா பல மில்லியன் டொலர் மதிப்பிலான MQ-9 Reaper ரக ஆளில்லா வானூர்திகளை தொலைத்துள்ளது.
மார்ச் 15ஆம் திகயிலிருந்து 7 ஆளில்லா வானூர்திகள் காணாமல்போனதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.
அதே காலக்கட்டத்தின்போது தான் அமெரிக்கா ஏமனில் ஆகாயத் தாக்குதல்களைத் தொடங்கியது. ஒரு MQ-9 இன் விலை சுமார் 30 மில்லியன் டொலர்களாகும்.
அவை எப்படித் தொலைந்தன என்பதை அதிகாரி தெரிவிக்கவில்லை. MQ-9 ஆளில்லா வானூர்திகள், கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தும் ஆயுதங்களை அடையாளம் கண்டு தாக்க உதவுகின்றன.
இதற்கிடையே F/A-18E போர் விமானத்தைத் தொலைத்துவிட்டதாக அமெரிக்கக் கடற்படை தெரிவித்துள்ளது. சுமார் 67 மில்லியன் டொலர் மதிப்பிலான அந்த விமானம் கடலில் விழுந்துள்ளது.
சம்பவத்தில் ஒருவர் காயமுற்றதாகவும் விசாரணை நடைபெறுவதாகவும் கடற்படை குறிப்பிட்டது.
கடலில் விழுந்த விமானம் மீட்கப்பட்டதா என்பது தெரிவிக்கப்படவில்லை.