ஈரானின் உள்விவகாரத்தில் தலையிடும் அமெரிக்கா : உயர்மட்ட தலைவர்கள் பரிசீலினை!
ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக 500இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போதைய நிலைமைகள் தொடர்பில் டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானில் கிட்டத்தட்ட 500 போராட்டக்காரர்கள் மற்றும் 48 பாதுகாப்புப் பணியாளர்களின் இறப்புகளை சரிபார்த்துள்ளதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர் செய்தி நிறுவனம் (HRANA) குறிப்பிட்டுள்ளது.
அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஈரானில் அரசுக்கு எதிராக போராடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டின் இராணுவம் அறிவித்துள்ளது. அத்துடன் அரசாங்க ஆதரவு பேரணிகளில் கலந்துகொள்ளுமாறும் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஈரானில் நடைபெறும் போராட்டங்களில் தலையிடவுள்ளதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இந்நிலையிலேயே இது தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் எவ்வாறான விடயங்கள் தொடர்பில் பரிசீலிக்கப்படுகிறது என்பது தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.





