குவைத்தில் அமெரிக்க போர் விமானங்கள் விபத்து!
குவைத்தில் அமெரிக்க போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குவைத்தின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.
ஜெட் விமானங்களின் பணியாளர்கள் “காயமின்றி உயிர் பிழைத்தனர்” என்றும், அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்திற்கான காரணங்கள் குறித்து அறிய தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.





