இலங்கை இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் : அமெரிக்கா கவலை
சிவில் சமூகங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் உள்ளீடுகளை உள்ளடக்காது நிறைவேற்றப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் தாக்கம் குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தமது எக்ஸ் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
“ஜனநாயக விழுமியங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன், தெளிவற்ற மற்றும் அதிகப்படியான கட்டுப்பாடுகள் கொண்ட சட்டங்கள் முதலீடுகள் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சியைத் தடுக்கலாம், இலங்கைக்குத் தேவையான பொருளாதார வளர்ச்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம். வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை கொடுக்கவும், எந்தவொரு சட்டமும் குரல்களை நசுக்காமல் இருப்பதை உறுதிப்படுத்தவும் அமெரிக்கா இலங்கையை வலியுறுத்துகிறது. என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
(Visited 5 times, 1 visits today)