அமெரிக்க கேபிடல் கலவரக்காரர் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கனடாவில் கைது
ஜனவரி 6 2021 கேபிடல் தாக்குதலில் ஈடுபட்டதற்காக தண்டனை விதிக்கப்பட்டு அமெரிக்காவிலிருந்து தப்பி ஓடிய கலவரக்காரர், மேற்கு கனடாவில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியானாவைச் சேர்ந்த 32 வயதான ஆண்டனி வோ, ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, ஜூன் 14, 2024 அன்று அமெரிக்க கூட்டாட்சி சிறையில் ஆஜராக உத்தரவிடப்பட்டார், ஆனால் அவர் தப்பிச் சென்றார்.
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பும்போது மன்னிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கனடாவுக்குத் தப்பிச் சென்றதாக அவர் பின்னர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.





