உலகம்

பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா… நிராகரித்த இஸ்ரேல்

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.மேலும் அவர்கள் நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாகவும் கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போர் 7 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் பாலஸ்தீனம் தரப்பில் இதுவரை சுமார் 34 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். மேலும் காசாவுக்குள் செல்லும் எல்லைகள் அனைத்தையும் இஸ்ரேல் முடக்கி உள்ளது. எனவே வெளிநாட்டு நிவாரண பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு அங்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்கிடையே இந்த போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.

அதன்படி காசா போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது.இதன்மூலம் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 3 பேர் பலியாகினர். மேலும் 10 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் காசாவின் ரபா பகுதியில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு குழந்தை உள்பட 19 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து காசா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்தார்.இதுகுறித்து அவர் கூறுகையில், இப்போது படைகளை பின்வாங்கினால் பதுங்கி இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவார்கள். எனவே அவர்களை முற்றிலும் ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என நேத்தன்யாகு தெரிவித்தார்.

மேலும் ரபா பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் அவர் அறிவுறுத்தி உள்ளார். இதனால் ரபா நகருக்குள் ராணுவத்தை அனுப்பி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு இருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.

அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதால் அங்கு பதற்றம் தீவிரம் அடைந்துள்ளது.

(Visited 20 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!