நிபந்தனையற்ற சரணடைதலுக்கான அமெரிக்காவின் அழைப்பு நிராகரிப்பு!
நிபந்தனையற்ற சரணடைதலுக்கான அமெரிக்காவின் கோரிக்கையை ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) நிராகரித்துள்ளார்.
தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தில் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மசூத் பெசெஷ்கியன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிபந்தனையற்ற சரணடைதல் ட்ரம்ப் கல்லறைக்கு எடுத்துச் செல்லும் கனவு என்றும் விபரித்துள்ளார்.
அதேநேரம் பிராந்திய நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு கேட்டுள்ளார். தெஹ்ரான் அவற்றைத் தடுக்க வேண்டும் என்றும், அவை அணிகளில் தவறான தகவல்தொடர்புகளால் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.




