அரிய வகை கனிமங்கள் ஒப்பந்ததில் கையெழுத்திட்ட அமெரிக்கா மற்றும் ஜப்பான்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆசியாவில் உள்ள 3 நாடுகளுக்கு அரச முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக ஜப்பான் நாட்டுக்கு அவர் சென்றார்.
அமெரிக்காவுடன் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்களில் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்படும் வகையில் ட்ரம்புக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமரான சனே டகாய்ச்சியை(Sane Takaichi) அந்நாட்டின் அகாசகா அரண்மனையில்(Akasaka Palace) ட்ரம்ப் நேரில் சந்தித்து உரையாடினார்.
பிரதமராக டகாய்ச்சி பதவியேற்ற பின்னர், அவர்களுக்கு இடையே நடந்த இந்த முதல் சந்திப்பானது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த சந்திப்பின்போது, அரிய வகை கனிமங்கள் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் இரு நாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
சீனா சமீபத்தில் அரிய வகை தனிமங்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்தது. இது பல்வேறு வகையான பொருட்களின் உற்பத்திக்கு அடிப்படையானது.இந்த சூழலில், முக்கியமான கனிமங்களுக்கான அணுகலை அதிகரிக்க அமெரிக்கா முயற்சிக்கும் நிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.





