அமெரிக்க விமான நிலையங்களில் உச்சக்கட்ட நெருக்கடி நிலை – 6,000 விமானங்கள் தாமதம்
மேலும் சில விமான நிலையங்கள் ஊழியர்கள் பற்றாக்குறையால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
நியூயோர்க், லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் டென்வரைச் சுற்றியுள்ள முக்கிய விமான நிலையங்கள் ஊழியர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டன.
லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹொலிவுட் பர்பேங்க் விமான நிலையத்தில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு வசதி ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக திங்கள்கிழமை பிற்பகல் முதல் மாலை வரை முழுமையாக மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் முடக்கத்தின் போது மற்ற அரசு ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டாலும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் அத்தியாவசிய ஊழியர்களாகக் கருதப்படுகிறார்கள். மேலும் அவர்கள் ஊதியமின்றி தொடர்ந்து பணியாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
பணிநிறுத்தம் தொடங்கியதிலிருந்து மருத்துவ விடுப்பு கோரிக்கைகள் சற்று அதிகரித்திருந்தாலும், வான்வெளி இன்னும் பயணிகளுக்கு பாதுகாப்பானது என்று போக்குவரத்துச் செயலாளர் சீன் டபி கூறினார்.





