வட அமெரிக்கா

இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை – வல்லுநர்கள் வெளியிட்ட தகவல்

இஸ்ரேலியக் குடியேறிகளுக்குப் பயணத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேற்குக் கரையில் வசிப்போர் மீது தாக்குதல் நடத்திய நிலையில் இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் எடுத்துள்ள இஸ்ரேலுக்கு எதிரான அந்த நடவடிக்கை அரிது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஒக்டோபர் மாதம் ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே சண்டை தொடங்கியது முதல் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனர்களில் 250 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கு இஸ்ரேலிய ராணுவப் படையினரும் குடியேறிகளும் காரணம் என நம்பப்பகிறது. வன்முறையில் ஈடுபடும் குடியேறிகளைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்துகிறது.

அத்தகைய தாக்குதல்களை ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் திரு. பைடன் தொடர்ந்து கூறிவருகிறார்.

மேற்குக் கரையின் அமைதிக்குக் கேடு விளைவிக்கும் எவரும் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் வலியுறுத்தினார்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்