இலங்கை

மேர்வின் சில்வாவை கைது செய்யுமாறு வலியுறுத்தல்!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை கைது செய்யுமாறு யாழ்ப்பாணத்தில் உள்ள சில தமிழ் அமைப்புக்கள் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் முறைப்பாடளித்துள்ளன.

தென்னிலங்கை சிங்கள மக்கள் வடக்கிலுள்ள தமிழ் மக்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் பகிரங்கமாக பல கருத்துக்களை வெளியிட்டு வருவதால் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் அமைச்சர் தமிழ் மக்களுக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளதாகவும் அவர்களின் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விகாரைகள்மீது கைவைத்தால் வடக்கு கிழக்கில் உள்ளவர்களின் தலைகளை களனிக்கு கொண்டுவருவேன்என அதில் மேர்வின் சில்வா அ ண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!