(UPDATE) கஜகஸ்தான் தொழிற்சாலையில் தீவிபத்து : பலி எண்ணிக்கை 30 ஐக் கடந்தது!
கஜகஸ்தானில் ஏற்பட்ட சுரங்கத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. அத்துடுன் 18 பேர் காணாமல்போயுள்ளதாக அவசரகால சூழ்நிலைகளுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்டபோது சுரங்கத்திற்குள் 252 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் 23 பேரை காணவில்லை என்றும் அதன் உரிமையாளரான ஆர்செலர் மிட்டல் டெமிர்டாவ் கூறினார்.
மீதேன் வாயு வெடிப்பினால் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.





