புறப்பட்ட ஏழு நிமிடத்தில் உணரப்பட்ட அசாதாரண வாசனை – ஆக்லாந்திற்கே திரும்பிய விமானம்!
நியூசிலாந்தின் ஆக்லாந்திலிருந்து (Auckland) கனடாவின் வான்கூவருக்குச் (Vancouver) பயணித்த ஏர் கனடா ( Air Canada ) விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் ஆக்லாந்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.
ஏர் கனடா விமானியின் காக்பிட்டில் (cockpit) “அசாதாரண வாசனை இனங்காணப்பட்டமையால் குறித்த விமானம் திருப்பிவிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணம் தொடங்கிய ஏழு நிமிடங்களில் விமானிகள் அவசரநிலையை அறிவித்ததாகவும், உடனடியாக யூடர்ன் எடுக்கப்பட்டு ஆக்லாந்திற்கு திரும்பியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகுந்த எச்சரிக்கையுடன் விமானம் தரையிறக்கப்பட்டதாகவும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





