மொசாம்பிக்கில் அமைதியின்மை : சிறை கைதிகள் 33 பேர் பலி!
மொசாம்பிக் தலைநகர் மாபுடோவில் சிறைக் கலவரத்தில் 33 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டின் காவல்துறை பொதுத் தளபதி பெர்னார்டினோ ரஃபேல் தெரிவித்துள்ளார்.
மொசாம்பிக்கின் உச்ச நீதிமன்றம் நீண்ட காலமாக ஆளும் கட்சியான ஃப்ரெலிமோ தேர்தலில் வெற்றி பெற்றதை உறுதிசெய்தது, வாக்கு மோசடி செய்யப்பட்டதாகக் கூறும் எதிர்க்கட்சி குழுக்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களால் போராட்டங்கள் வெடித்தன.
போராட்டத்தின் ஒரு பகுதியாக சிறைச்சாலையில் கலவரங்கள் வெடித்துள்ளன. இதில் 33 பேர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சிறைக்கு வெளியே நடந்த போராட்டங்கள் கலவரத்தை ஊக்குவிப்பதாக ரஃபேல் குற்றம் சாட்டினாலும், நீதி அமைச்சர் ஹெலினா கிடா சிறைக்குள்ளேயே அமைதியின்மை தொடங்கப்பட்டது என்றும், வெளியில் நடக்கும் போராட்டங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் சுமார் 1,534 பேர் சிறையிலிருந்து தப்பிச் சென்றனர், ஆனால் தற்போது 150 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கதப்படுகிறது.