ஈரானில் நிலவும் அமைதியின்மை – 68 பேர் பலியானதாக அறிவிப்பு!
ஈரானில் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக 48 போராட்டக்காரர்கள் மற்றும் 14 பாதுகாப்புப் படையினர் உட்பட 68 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதியின்மையை தவிர்க்க அதிகாரிகள் இணையத்தை முடக்கியுள்ளனர். இந்நிலையில் ஈரான் வெளி உலகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள நகரங்களில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதால், கட்டிடங்கள் தீப்பிடித்து எரிவதைக் காட்டும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி பின்வாங்கப் போவதில்லை என்று சபதம் செய்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள், புலம்பெயர்ந்த எதிர்க்கட்சிக் குழுக்கள் அமெரிக்காவிற்கு சார்பாக செயற்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை ஈரானில் நாசவேலையில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று அரசத்துறை வழக்கறிஞர் ஒருவர் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





