ஜப்பானில் வரலாறு காணாத காட்டுத்தீ – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

ஜப்பானின் வடக்கில் காட்டுத்தீ மோசமாகப் பரவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் ஆயிரக்கணக்கானோர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். குறைந்தது ஒருவர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜப்பானில் 30 ஆண்டுகள் கண்டிராத ஆக மோசமான காட்டுத்தீ ஏற்பட்டிருக்கிறது. ஒஃபுனாத்தோ நகரத்தில் சுமார் 2,000 பேர் வீட்டிலிருந்து வெளியேறி நண்பர்கள், உற்றார் உறவினர்களுடன் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
1,200க்கும் மேற்பட்டோர் தற்காலிக இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். காட்டுத்தீ 1,800 ஹெக்டர் அளவைவிடப் பெரியது என்று சில அறிக்கைகள் முன்னுரைத்திருக்கின்றன.
தீயணைக்கும் பணிகளில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. இதுவரை 80க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்திருக்கின்றன.
1,700 க்கும் மேற்பட்ட தீயணைப்பாளர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவரப் போராடுகின்றனர்.