ஹெட்ஃபோனால் நடந்த விபரீதம்: பரிதாபமாக உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன்

பேராதனை பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் பெனிதெனிய பிரதேசத்தில் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
பல்கலைக்கழக சட்ட பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் ஒரு ஜோடி ஹெட்ஃபோன்களை அணிந்து கொண்டு ரயில் தண்டவாளத்தில் நடந்து கொண்டிருந்தபோது நாவலப்பிட்டி-கண்டி ரயிலில் மோதியதாக கூறப்படுகிறது.
(Visited 16 times, 1 visits today)