விளையாட்டு

IPL Match 14 – 125 ஓட்டங்கள் குவித்த மும்பை அணி

ஐபிஎல் தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ரோகித்- இஷான் கிஷன் களமிறங்கினர்.

ட்ரெண்ட் போல்ட்டின் அசத்தலான பந்து வீச்சால் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது. ரோகித், நமன் டக் அவுட் ஆகினார். போல்ட் வீசிய 2-வது ஓவரில் ப்ராவிஸ் (0) முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

இஷான் 1 ரன் எடுத்தார். ஓவரின் 5-வது பந்தையும் தனது முதல் பந்தையும் சந்தித்த ரோகித் டக் அவுட் ஆனார். அடுத்த வந்த நமனும் 0 ரன்னில் அவுட் ஆனார்.

முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய போல்ட், அவர் வீசிய 2-வது ஓவரில் ப்ரீவிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். ஒரு சிக்ஸ் 2 பவுண்டரிகளை விளாசிய இஷான் கிஷன் 16 ரன்களில் வெளியேறினார்.

இதனால் மும்பை அணி 20 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து கேப்டன் பாண்ட்யாவுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

சிறப்பாக ஆடிய பாண்ட்யா 34 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த சாவ்லா 3 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய திலக் 32 ரன்னிலும் டிம் டேவிட் 17 ரன்களிலும் அவுட் ஆகினர்.

இதனால் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் சாஹல், டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

(Visited 2 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content