வட அமெரிக்கா

அமெரிக்கா – மர்மமான முறையில் உயிரிழந்த 17 நோயாளிகள்… தாதிக்கு 380-760 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசிப்பவர் 41 வயதான ஹீதர் பிரஸ்டீ. இவர் 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரை அங்குள்ள நான்கு மாவட்டங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட முதியோர் மறுவாழ்வு மையங்களில் தாதியாக  பணியாற்றி வந்துள்ளார்.

இவர் பணியாற்றி வந்த மறுவாழ்வு மையங்களில் வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து 17க்கும் அதிகமான நோயாளிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது, அடிக்கடி முதியோர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இறந்தவர்கள் முதியோர்கள் என்பதால் மறுவாழ்வு மையத்தில் பணியாற்றும் சக தாதியர்கள் இதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.

ஆனால் ஒரு கட்டத்தில் நர்ஸ் ஹீதர் பிரஸ்டீயின் நடத்தை, அவர் நோயாளிகளை அலட்சியப்படுத்து மற்றும் அவர்களை இழிவான முறையில் கடுமையாக திட்டுவது போன்றவை சக தாதியரை சந்தேகப்பட வைத்தது.

இன்சுலின் ஊசி பயன்படுத்தாதவர்கள் உடற் பயிற்சி மூலம் நீரிழிவு நோயை  கட்டுப்படுத்தலாம் | People do not use insulin injections can control  diabetes by using physical exercise

இதனையடுத்து, தாதி ஹீதர் பிரஸ்டீவை பிடித்து விசாரணையில் நடத்தியதில் அதிர்ச்சி தகவலை அவர் தெரிவித்துள்ளார். நோயாளிகளின் நீரிழிவு அளவை பொருட்படுத்தாமல் அதிகப்படியான இன்சுலின் வழங்கியதாக அவர் கூறியதை கண்டு சக நர்சுகள் அதிர்ந்து போயினர்.

இன்சுலின் வழங்கிய 19 நோயாளிகளில் 17 பேர் நீரிழிவு நோய் இல்லாமலே அளவுக்கு அதிகமாக இன்சுலின் வழங்கியதால் இறந்துள்ளது பொலிஸாரையே அதிர வைப்பதாக இருந்தது. இதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ள நர்ஸ் ஹீதர் பிரஸ்டீ, தனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் நோயாளிகளிடமும், மற்றவர்களிடமும் கோபமாக நடந்துகொண்டதாக கூறினார்.

ஆரம்பத்தில் இந்த குற்றங்களை மறுத்து வந்த நர்ஸ் ஹீதர் பிரஸ்டீ, கடந்த பிப்ரவரி மாத விசாரணையின்போது, தனது வழக்கறிஞர்களிடம் தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.இதனையடுத்து, 41 வயதான ஹீதர் பிரஸ்டீக்கு, மூன்று ஆயுள் தண்டனையும், 380-760 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி பட்லர் நகர நீதிமன்றம் உத்தரவிட்டது.

(Visited 12 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்