ஐநா வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் எரிசக்தி அமைச்சருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு
இலங்கைக்கான ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-André Franche திங்கட்கிழமை (செப். 18) காலை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகரவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, அரசின் கொள்கைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள், மின்சாரத் துறை சீர்திருத்தக் கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான நிதி உதவி மற்றும் பசுமை நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தரப்புக்கும் இடையே விவாதிக்கப்பட்டது.
மேலும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய உதவும் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
(Visited 4 times, 1 visits today)