போதைப்பொருள் படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் – ஐ.நா மனித உரிமைகள் தலைவர் கண்டனம்
தென் அமெரிக்காவிலிருந்து(South America) சட்டவிரோத போதைப்பொருட்களை கொண்டு சென்றதாகக் கூறப்படும் கரீபியன் கடல்(Caribbean Sea) மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில்(eastern Pacific Ocean) படகுகள் மீது அமெரிக்க இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்(UNHCR) தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தத் தாக்குதல்கள் “ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்றும் அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் தலைவர் வோல்கர் டர்க்(Volker Turk) குறிப்பிட்டுள்ளார்.
மேலும், படகுகளை இடைமறித்தல் மற்றும் சந்தேக நபர்களை தடுத்து வைத்தல், தேவைப்பட்டால், தனிநபர்கள் மீது வழக்குத் தொடுத்தல் உள்ளிட்ட சட்ட அமலாக்க முறைகளைப் பயன்படுத்துமாறு அவர் அமெரிக்காவிடம் அழைப்பு விடுத்துள்ளார்.
செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து போதைப்பொருள் படகுகள் மீது அமெரிக்கா இதுவரை 15தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இதன் மூலம் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்தி
பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் படகு மீதான அமெரிக்க தாக்குதலில் 4 பேர் மரணம்





