காசாவிற்கு மின்சாரம் மீண்டும் கிடைக்க அழைப்பு விடுத்த ஐ.நா

காசாவிற்கு மின்சாரம் துண்டிக்க இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து ஐ.நா. தலைவர் “கவலைப்படுகிறார்” என்று அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
“இந்த சமீபத்திய முடிவு காசா பகுதியில் குடிநீர் கிடைப்பதை கணிசமாகக் குறைக்கும்” என்று டுஜாரிக் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
“இன்று முதல், இந்த வசதி காப்பு ஜெனரேட்டர்களில் இயங்க உள்ளது, இது நீர் உற்பத்தி திறனைக் குறைக்கும். இந்த இணைப்பை மீட்டெடுப்பது பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கு இன்றியமையாதது.”
ஐ.நா. தலைவர் மட்டுமன்றி மேலும் பல அமைப்புகளின் தலைவர்களும் நாட்டின் தலைவர்களும் இந்த நடவடிக்கைக்கு கவலை மற்றும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
(Visited 1 times, 1 visits today)