ஜார்க்கண்டில் பட்டாசு கடையில் தீ விபத்து – 3 குழந்தைகள் உட்பட ஐவர் பலி

ஜார்க்கண்டின் கார்வாவில் உள்ள ஒரு பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உடல் கருகி உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரங்கா காவல் நிலையப் பகுதியில் உள்ள கோதர்மனா பஜாரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
“ஒரு பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதில் மூன்று குழந்தைகள் அடங்குவர். சம்பவம் குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்” என்று கார்வா எஸ்பி தீபக் பாண்டே தெரிவித்தார்.
“காயமடைந்தவர்களை சத்தீஸ்கரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம், அங்கு மருத்துவர்கள் அவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்தனர்,” என்று சிங் குறிப்பிட்டார்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இதற்கிடையில், ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் மற்றும் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் சம்பவத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புக்கு இரங்கல் தெரிவித்தனர்.