‘very late’- பிரிட்டனின் முடிவு குறித்து ட்ரம்ப் அதிருப்தி!
ஈரான் மீதான தாக்குதல்களுக்குத் தனது ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு பிரிட்டன் அனுமதி வழங்கிய போதிலும், அதனை ட்ரம்ப் வெளிப்படையாக வரவேற்கவில்லை.
மாறாக இது தாமதித்து எடுக்கப்பட்ட முடிவாகும் என அவர் விமர்சித்துள்ளார்.
இது விடயத்தில் பிரிட்டனின் செயல்பாடுகள் மிகவும் மந்தமாக இருப்பதாக டிரம்ப் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே மிகச்சிறந்த உறவு இருந்தபோதிலும், இந்த விவகாரத்தில் பிரிட்டன் இன்னும் வேகமாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்பதே ட்ரம்பின் கருத்தாக உள்ளது.
ஈரான்மீதான தாக்குதலுக்கு பிரிட்டன் விமான தளங்களைப் பயன்படுத்த அனுமதி!





