ஐரோப்பா

உக்ரைனின் சிறந்த போர் விமானி மரணம்

உக்ரைனின் சிறந்த போர் விமானிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆண்ட்ரி ப்பில்-ஷிக்கோவ் என்பவர் நடுவானில் நேர்ந்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

அவரோடு சேர்த்து விமான ஊழியர்கள் இருவரும் கொல்லப்பட்டனர். ரஷ்ய ஊடுருவலின் தொடக்கக் காலத்தில், தலைநகர் கீவ் வான்வெளியில் நடைபெற்ற விமானச் சண்டையில் வீரதீரம் காட்டியவர் அவர் எனக் கீவ் குறிப்பிட்டது.

அவர்கள் மூவரின் மரணம், வேதனையானது என்றும் ஈடுகட்ட முடியாத இழப்பு என்றும் உக்ரேனிய ராணுவம் தெரிவித்தது.

அபாரமான திறமையும் அறிவும் படைத்த விமானி என்று திரு. ப்பில்ஷிக்கோவுக்கு அது புகழாரம் சூட்டியது.

அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி அவரது மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

எதனால் அந்த விமான விபத்து நேர்ந்தது என்பது பற்றிப் புலனாய்வு நடத்தப்படுகிறது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்