போர் களத்தில் போதிய ஆயுதங்கள் இன்றி தடுமாறும் உக்ரைன்
உக்ரைன் தற்போது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுக்கு குறிப்பிடத்தக்க பற்றாக்குறையை எதிர்கொன்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் உள்ள அவ்திவ்கா நகரை ரஷ்ய இராணுவம் கைப்பற்றியதுதான் இது தொடர்பாக அதிகம் பேசப்பட்டது.
ஆயுதம் இல்லாததால் உக்ரைன் இராணுவம் அப்பகுதியில் இருந்து பின்வாங்க நேரிட்டதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸ்லெனெஸ்கி தெரிவித்தார்.
இதனிடையே, உக்ரைனின் வீழ்ச்சி அமெரிக்காவிலும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க காங்கிரசுக்கு வழங்கப்பட்ட 95 பில்லியன் அமெரிக்க டாலர் வெளிநாட்டு உதவிப் பொதிக்கு செனட் ஒப்புதல் அளித்த போதிலும், பிரதிநிதிகள் சபை அதை நிராகரித்தது.
இந்த உதவிப் பொதி குடியரசுக் கட்சி உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த உதவித் தொகையில், 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உக்ரைனுக்கு இராணுவ உதவியாக உள்ளது.
ஆனால், இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ்தான் காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் உரிய உதவித் தொகையை வழங்குவதாக உக்ரைன் அதிபரிடம் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், ஜேர்மனியில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸ்லென்ஸ்கி மேற்கத்திய நட்பு நாடுகள் மீது வாய்மொழி தாக்குதலை நடத்தியிருந்தார்.
போர் எப்போது முடிவடையும் என்று உக்ரைனிடம் கேட்க வேண்டாம் என்றார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஏன் போரை மேலும் முன்னெடுத்துச் செல்கிறார் என்று நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.