உக்ரைன் அமைதித் திட்டம்: சீனத் தூதருடன் பேச்சுவார்த்தை
ரஷ்யாவுடனான இரண்டு ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் கெய்வின் திட்டத்தை வலியுறுத்தி மூத்த உக்ரேனிய அதிகாரிகள், வியாழன் அன்று சீன பிராந்திய தூதுவருடனான சந்திப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதன்போது மாஸ்கோவிற்கு வட கொரிய ஆயுதங்கள் வழங்கப்பட்டதற்கான ஆதாரமாக அவர்கள் கூறியதை முன்வைத்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் ஜனாதிபதி நிர்வாகத்தின் தலைவரான Andriy Yermakகும் அவரது குழுவும் போர்க்களத்தின் நிலைமை மற்றும் கிய்வின் சமாதான முன்மொழிவுகளை யூரேசிய விவகாரங்களுக்கான சீனாவின் சிறப்பு பிரதிநிதி லி ஹுய்யிடம் முன்வைத்ததாக தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தரப்பு “லி ஹுய்யுடன் உக்ரைனுக்கு நியாயமான அமைதியை நிலைநாட்டுவதற்கான வாய்ப்புகள், உக்ரேனிய அமைதி சூத்திரத்தின் அடிப்படையில் நமது நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மீட்டெடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்ததாக” எர்மக் கூறினார்.
உக்ரைனின் அமைதித் திட்டம், ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியால் முன்வைக்கப்பட்டது, அனைத்து ரஷ்ய துருப்புக்களையும் அகற்றவும், 1991 சோவியத்துக்கு பிந்தைய உக்ரைனின் எல்லைகளை மீட்டெடுக்கவும் மற்றும் அதன் நடவடிக்கைகளுக்கு ரஷ்யா பொறுப்புக்கூறும் செயல்முறையை உருவாக்கவும் அழைப்பு விடுக்கிறது.
வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில், சீன வெளியுறவு அமைச்சகம், லி உக்ரைனின் முதல் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான யெர்மாக்குடன் இரு நாடுகளின் உறவுகள் மற்றும் உக்ரைன் நெருக்கடி குறித்து “வெளிப்படையான மற்றும் நட்புரீதியான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்” என்று கூறியது.
ஐரோப்பாவிற்கு தனது இரண்டாவது பயணத்தை மேற்கொண்ட லி, கடந்த வாரம் மாஸ்கோவில் ஒரு ரஷ்ய துணை வெளியுறவு மந்திரியை சந்தித்து மாஸ்கோவின் பங்கேற்பு இல்லாமல் உக்ரைன் தீர்வு பற்றி விவாதிக்க இயலாது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.