கிரீன்லாந்துக்கு அனுப்பப்படும் இங்கிலாந்தின் துருப்புகள்?
ஆர்க்டிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை வலுப்படுத்த நேட்டோ நட்பு நாடுகளுடன் இங்கிலாந்து இணைந்து பணியாற்றுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கிரீன்லாந்து தீவுக்கு இங்கிலாந்தின் துருப்புகள் அனுப்பப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி கிரீன்லாந்தை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகின்ற நிலையில், இராணுவ பலத்தை பிரயோகிப்பதை மறுக்கவில்லை. இந்நிலையிலேயே மேற்படி துருப்புகள் அனுப்பபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராக ஆர்க்டிக் பிராந்தியத்தை பாதுகாப்பது பற்றிய விவாதங்கள் மற்றும் நேட்டோவோடு இணைந்து பணியாற்ற வேண்டிய வழக்கமான பணியின் நிமித்தமாகவும் மேற்படி துருப்புகள் அனுப்படவுள்ளதாக போக்குவரத்து செயலாளர் ஹெய்டி அலெக்சாண்டர் (Heidi Alexander) கூறியுள்ளார்.
வீரர்கள், போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் கிரீன்லாந்திற்கு அனுப்பப்படுவதற்கான சாத்தியம் தொடர்பில் இராணுவ உயர் அதிகாரிகள் பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





