ஐரோப்பா செய்தி

பிரித்தானிய திட்டமிடல் சட்ட ஆலோசகர் விலகல்: அரசாங்கத்தில் குழப்பம்.

பிரிட்டனின் உள்கட்டமைப்பு மற்றும் வீட்டுவசதித் திட்டங்களுக்காகத் திட்டமிடல் சட்டங்களை மாற்றுவதற்கான நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸின் (Rachel Reeves) முயற்சிக்கு ஆலோசகராக இருந்த சிரேஷ்ட வழக்கறிஞர் கத்ரின் கௌவார்ட் (Catherine Howard), நான்கு மாதங்களுக்குப் பிறகு அரசாங்கத்தை விட்டு வெளியேறவுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.

திட்டமிடல் விதிமுறைகளை ஒதுக்கித் தள்ளி, பெரிய திட்டங்களை உடனடியாகத் தொடங்க அரசாங்கம் மேற்கொண்ட தீவிரமான முயற்சிகளுக்கு எதிராக அவர் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்துக் கருத்து வேறுபாடுகள் நிலவும் சூழலில் இவரின் இந்தத் தீர்மானம் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், தீவிரமான திட்டமிடல் சீர்திருத்தங்களைத் தவிர்க்குமாறு பிரதமருக்கு 30 தொழிற் கட்சி எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

AJ

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!