பிரித்தானியாவில் கடவுச்சீட்டு கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்
பிரித்தானியா புதிய கடவுச்சீட்டு விண்ணப்பக் கட்டணத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு, ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.
பிரித்தானியாவில் கடவுச்சீட்டு கட்டணங்கள் 7 வீதத்தால் அதிகரிக்க உள்ளதாக உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, 16 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கான ஒன்லைன் விண்ணப்பங்களுக்கான கட்டணம், 82.50 பவுண்டுகளிலிருந்து 88.50 பவுண்டுகளாக அதிகரிக்கப்படவுள்ளது.
16 வயதுக்குக் குறைவான சிறுவர்களுக்கான கடவுச்சீட்டு கட்டணம், 53.50 பவுண்டுகளிலிருந்து 57.50 பவுண்டுகளாகவும் உயர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளிலிருந்து தபால் வழியாக கடவுச்சீட்டை பெற விண்ணப்பிப்பவர்களுக்கான கட்டணமும் மேற்குறிப்பிட்ட அளவிலேயே அதிகரிக்கப்படவுள்ளது.
ஏற்கனவே, கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் பாஸ்போர்ட் கட்டணங்கள் சுமார் 9 சதவீதம் வரை அதிகரித்த நிலையில், தற்போது மீண்டும் அவை மீண்டும் 7 சதவீதத்தால் உயர இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் பிரித்தானியாவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளவுள்ள சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகுவதாக குறிப்பிடப்படுகின்றது.