போர் குற்றங்களில் ஈடுபட்ட சூடான் தளபதிகள் மீது தடை விதித்த இங்கிலாந்து!
சூடானில் போர் குற்றங்களில் ஈடுபட்ட 06 நபர்களுக்கு எதிராக இங்கிலாந்து அரசாங்கம் புதிய தடைகளை இன்று அறிவித்துள்ளது.
படுகொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமையை போர் ஆயுதமாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட விரைவு ஆதரவுப் படைகள் (RSF) மற்றும் சூடான் ஆயுதப் படைகள் (SAF) ஆகிய இரண்டின் மூத்த தளபதிகள் மீதும் மேற்படி தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள யெவெட் கூப்பர் (Yvette Cooper), அரசாங்கம் “போர் இயந்திரத்தை அகற்றுவதை” நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், போர் நிறுத்தம் மற்றும் உதவி நிறுவனங்களுக்கு தடையற்ற அணுகலை வழங்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன் அகதிகளைச் சந்தித்க சூடான்-சாட் எல்லைக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்போது வன்முறையை நிவர்த்தி செய்வதன் அவசரத்தையும் குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைப்பதன் அவசியத்தையும் உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.




