UK: லிவர்பூல் செல்ல வேண்டிய விமானம் திடீரென இரத்து – ஸ்பெயினில் சிக்கி தவித்த பயணிகள்!

லிவர்பூலுக்குச் செல்லும் ஈஸிஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி இரவு 11.25 மணிக்கு ஸ்பானிஷ் நகரத்திலிருந்து புறப்படவிருந்த விமானத்தில் இருந்து அலறல் சத்தம் கேட்டதை தொடர்ந்து விமானம் இரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
நேரில் கண்ட சாட்சியின் கூற்றுப்படி, குடிபோதையில் இருந்த மூன்று பயணிகளை ஈஸிஜெட் ஊழியர்கள் மற்றும் ஸ்பானிஷ் போலீசார் விமானத்திலிருந்து இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த திடீர் சம்பவத்தைத் தொடர்ந்து பலர் லிவர்பூல் எக்கோவிடம் பேசுகையில், ஈஸிஜெட்டின் வாடிக்கையாளர் சேவையில் அதிருப்தி அடைந்ததாகக் கூறியுள்ளனர்.
சிலர் ஊழியர்கள் புதிய விமானத்தில் ஏற “ஒரு செயலியைப் பயன்படுத்த” சொன்னதாகக் கூறினர். தங்குமிடம் இல்லாததால் அன்றிரவு மலகா விமான நிலையத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது என்று பல விமானப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.