தொடர்ச்சியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள இங்கிலாந்து மருத்துவர்கள்!
இங்கிலாந்தில் உள்ள மருத்துவர்கள் நவம்பர் மாதத்தில் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என பிரித்தானிய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதம் 14 ஆம் திகதி காலை 7 மணி முதல் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி காலை 7 மணி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இரண்டாம் நிலை மருத்துவர்கள் என அறியப்படும் மருந்துவர்கள் நிரந்த பணிநியமனம் கோரி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அத்துடன் சம்பள உயர்வு குறித்தும் வலியுறுத்தியுள்ளனர்.
இருப்பினும் அவர்களது கோரிக்கைகளுக்கு அரசு உரிய பதில்களை வழங்கவில்லை. இந்நிலையிலேயே போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை முடிக்க விரும்பினாலும், அரசாங்கம் அவ்வாறு செய்யவில்லை, வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்று போராட்டத்தில் ஈடுபடவுள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.





