ஹோவிஸ் – கிங்ஸ்மில் இணைப்பு: தீவிரமடையும் விசாரணை
பிரித்தானியாவின் முன்னணி ரொட்டி நிறுவனங்களான ஹோவிஸ் (Hovis) மற்றும் கிங்ஸ்மில் (Kingsmill) இடையிலான 75 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான இணைப்பை, அந்நாட்டின் போட்டி ஆணையம் இன்று முதல் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது.
இந்த இணைப்பால் சந்தையில் போட்டி குறைந்து, ரொட்டியின் விலை அதிகரிக்கக்கூடும் என ஆணையம் கவலை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தச் செய்தியைத் தொடர்ந்து கிங்ஸ்மில் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஏபிஎஃப் (ABF) பங்குகள் இன்று காலை 11 சதவீதத்திற்கும் மேல் சரிவைச் சந்தித்தன.
பிரைமார்க் (Primark) விற்பனை வீழ்ச்சியால் லாபம் குறையும் என அந்நிறுவனம் விடுத்த எச்சரிக்கையும் இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த விசாரணை வரும் ஜூன் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது





