UK வரவு செலவு திட்டம் – இரண்டு குழந்தை சலுகை வரம்பு இரத்து!
பிரித்தானியாவில் இரண்டு குழந்தை சலுகை வரம்பு (two-child benefits limit) 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவு திட்ட பொறுப்பு அலுவலகம் (OBR) இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தக் கொள்கை மாற்றம் 2029-30 ஆம் ஆண்டுக்குள் குழந்தை வறுமையை 450,000 ஆகக் குறைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சூதாட்ட வரிகளில் சீர்திருத்தங்கள், நலன்புரி அமைப்பில் மோசடிகளைத் தடுத்தல் மற்றும் வரி தவிர்ப்பை முறியடித்தல் மூலம் இந்த திட்டத்திற்கு முழுமையாக நிதியளிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த முடிவை வறுமை எதிர்ப்பு பிரச்சாரகர்கள் மற்றும் அமைப்புகள், குழந்தை வறுமை நடவடிக்கை குழுக்கள் பரவலாக வரவேற்றுள்ளன.




