உலகம் செய்தி

3 மணித்தியாலங்களுக்கு மட்டும் இந்தியா வந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி

ஐக்கிய அரபு அமீரக(United Arab Emirates) ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்(Sheikh Mohammed bin Zayed Al Nahyan) இன்று இந்தியாவிற்கு திடீர் விஜயம் ஒன்று மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியை பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) டெல்லி விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றுள்ளார்.

இந்த வருகை குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட மோடி, “எனது சகோதரரான ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை வரவேற்க விமான நிலையத்திற்குச் சென்றேன். அவரது வருகை வலுவான இந்தியா மற்றும் அமீரகத்தின் நட்புறவுக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவத்தை விளக்குகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் வருகை தந்துள்ள ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி 3 மணி நேரம் மட்டுமே இந்தியாவில் இருப்பார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதியான பிறகு இந்தியாவிற்கு வருவது இது மூன்றாவது முறையாகும்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!