ஈரானின் ஏவுகணை, ட்ரோன்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடைமறிக்கப்பட்டது
ஈரான் (Iran) ஏவிய ஏழு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 15 ஆளில்லா விமானங்களை (drones) ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) தனது வான் பாதுகாப்புப் படைகள் மூலம் இன்று இடைமறித்துள்ளது.
மோதல் தொடங்கியதிலிருந்து இதுவரை 334 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 15 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 1,714 ஆளில்லா விமானங்கள் எதிர்கொண்டுள்ளதாகத் ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களின் போது, இரண்டு இராணுவ வீரர்கள் மற்றும் ஆறு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 158 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.




