உலகம் செய்தி

வியட்நாமை தாக்கிய கல்மேகி புயல் – ஐவர் மரணம்

பிலிப்பைன்ஸில்(Philippines) பேரழிவை ஏற்படுத்திய பிறகு, வியட்நாமை(Vietnam) தாக்கிய கல்மேகி(Kalmaegi) புயல் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காணாமல் போயுள்ளனர்.

மணிக்கு 149 கிமீ வேகத்தில் வீசிய கல்மேகி புயல் வியட்நாமில் பதிவான வலிமையான சூறாவளிகளில் ஒன்றாகும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 57 வீடுகள் இடிந்து விழுந்ததாகவும், கிட்டத்தட்ட 2,600 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது

உயிரிழந்தவர்கள் டக் லாக்கில்(Duc Lak) மூன்று பேர் மற்றும் கியா லாய்(Gia Lai) மாகாணங்களில் இரண்டு பேர், குவாங் நங்காயில்(Quang Ngai) ஒருவர் என்று மாநில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வார தொடக்கத்தில் பிலிப்பைன்ஸில் கல்மேகி புயல் காரணமாக 188 பேர் உயிரிழந்தனர், மேலும் 135 பேர் இன்னும் காணவில்லை.

(Visited 2 times, 2 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!