ஒன்றாரியோவில் இரண்டு இளைஞர்கள் மீது கத்தி குத்து தாக்குதல்
ஒன்றாரியோவில் இரண்டு இளைஞர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தென் ஒன்றாரியோவின் சட்பரி பகுதியின் கார்சன் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த கத்தி குத்துச் சம்பவத்தில் 17 வயதான சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களையும் பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி 17 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளான்.
இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இவ்வாறு கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கத்தி குத்து தாக்குதலினால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் கிடையாது என பொலிஸர்ர் தெரிவித்துள்ளனர்.





