யாழில் பல்கலைக்கழக இளைஞர்கள் இருவர் கைது! பின்னணியில் வெளியான காரணம்
வீதியில் செல்வோரிடம் அலைபேசிகளை களவெடுத்த்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருளுக்கு அடிமையாகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் செல்வோரிடம் அலைபேசிகளை அபகரித்து விற்பனை செய்து வந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்..
யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெ.மேனன் குழு இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
சந்தேக நபர்கள் இருவரும் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
(Visited 12 times, 1 visits today)





