செய்தி

வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் யாழில் கைது!

யாழ். வேலணை – புங்குடுதீவு வல்லன் பகுதில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்றுறை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புங்குடுதீவு வல்லன் பகுதியில் பொலிசார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு பகுதியில் அண்மைக்காலமாக வன்முறை கும்பலை சேர்ந்தவரின் அச்சுறுத்தல் அதிகரித்து மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதாக பலதரப்பட்டவர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்த நிலையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு வாள்கள் மற்றும் ஒரு அபாயகரமான கோடாலி உட்பட சில பொருட்களும் கைதானவர்களிடம் இருந்து பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள் ஊர்காவற்றுறை பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!