பெருவில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து! ரயில் சேவைகள் பாதிப்பு!
பெருவில் இரண்டு சுற்றுலா ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் காயமடைந்துள்ளனர்.
கோரிவைராச்சினா (Qoriwayrachina ) அருகே நிகழ்ந்த இந்த விபத்தில், ரயில்வே ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து, மச்சு பிச்சுவை (Machu Picchu) அருகிலுள்ள குஸ்கோ (Cuzco) நகரத்துடன் இணைக்கும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில் விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.





