வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 14 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்றதற்காக இலங்கை மற்றும் இந்திய நாட்டவர்களான இரண்டு விமான பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இலங்கை விமானப் பயணி இரத்தினபுரியைச் சேர்ந்த 26 வயதுடைய தொழிலதிபர் எனவும், இந்திய விமானப் பயணி 23 வயதுடைய தொழிலதிபர் எனவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் கொண்டு வந்த 06 சூட்கேஸ்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 69,400 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 347 சிகரெட் அட்டைப் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரண்டு விமானப் பயணிகளும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் நாளை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.





